தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிகிச்சை பலனின்றி சிறுவன் பலி

சிகிச்சை பலனின்றி சிறுவன் பலி

சிகிச்சை பலனின்றி சிறுவன் பலி


UPDATED : செப் 07, 2026 09:41 PM

ADDED : செப் 07, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2026 09:41 PM ADDED : செப் 07, 2026 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேளச்சேரி: வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஷாம்மார்கீஸ், 17. தனியார் பள்ளியில் பிளஸ் 2 மாணவன். கடந்த 4ம் தேதி, வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள தொட்டியில், எவ்வளவு தண்ணீர் உள்ளது என எட்டி பார்த்தபோது, அங்கிருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று பலியானார்.

70 கிலோ குட்கா கடத்திய வாலிபர் கைது

எழும்பூர்: அசாமில் இருந்து எழும்பூருக்கு அதிகாலை 1:15 மணிக்கு வந்த விரைவு ரயில், நடைமேடை 6ல் நின்றது. அதில் வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிகாஷ் ஜெனா, 26, என்பவரின் உடைமையில் 10 கிலோ குட்கா பொருட்கள் இருந்தன. அவரை கைது செய்த ரயில்வே போலீசார், குட்காவை பறிமுதல் செய்தனர்.

* குன்றத்துார் அடுத்த திருமுடிவாக்கம் 'சிட்கோ' தொழிற்பேட்டை அருகே, 'ஹூண்டாய் ஐ10' காரில் 70 கிலோ குட்கா கடத்தி வந்த சங்கரநாராயணன், 41, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

ஏணி திருடிய இருவர் கைது

அமைந்தகரை: அரும்பாக்கம் ரசாக் கார்டன், பாரதி தெருவைச் சேர்ந்த பிளம்பர் வெங்கட்ராமன், 56. இவரது வீட்டில் வைத்திருந்த 5 அடி உயர அலுமினிய ஏணியை திருடி, இருசக்கர வாகனத்தில் வைத்து, இருவர் எடுத்து சென்றனர். இதுகுறித்து 'சி.சி.டி.வி' காட்சிகளை வைத்து விசாரித்த போலீசார், சூளைமேடு அவ்வை நகரைச் சேர்ந்த விமல், 22, சியாம், 18, ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், மேலும் இரு வீட்டில் அலுமினிய ஏணி திருடியது தெரிந்தது. மூன்று ஏணிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடையில் சிகரெட் பாக்கெட், பணம் திருட்டு

சேலையூர்: சேலையூர் அடுத்த கோவிலாஞ்சேரியைச் சேர்ந்த நாகூரான், அதே பகுதியில் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை, இவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கல்லா பெட்டியில் இருந்த 13 ஆயிரம் ரூபாய், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகளை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஓட்டல் அறையை திறந்து திருட்டு

குரோம்பேட்டை: குரோம்பேட்டை ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஒரு அறையில் தங்கியிருந்தோர், நேற்று வெளியே சென்றனர். அப்போது, அங்கு புணிபுரியும் மணிகண்டன், 27, என்பவர், மாற்று சாவி மூலம் அந்த அறைக்கு சென்று 3,000 ரூபாய் திருடியுள்ளார். அதேபோல், மற்றொரு அறைக்கும் சென்றுள்ளார். இதுகுறித்து புகாரையடுத்து, குரோம்பேட்டை போலீசார், மணிகண்டனிடம் விசாரித்து வருகின்றனர்.

பெண்ணிடம் போன் பறித்த 2 பேர் கைது

மதுரவாயல்: மதுரவாயல் ஆலப்பாக்கம், ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த கரிஷ்மா, 24, ஆலப்பாக்கம் பிரதான சாலையில் கடந்த 3ம் தேதி நடந்து சென்றார். அவரிடம் மொபைல் போன் பறித்து தப்பிய காட்டுப்பாக்கம் லோகேஷ், 25, மவுலிவாக்கம் செல்வமணி, 24, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்; மொபைல் போனை மீட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us