தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மண் அள்ளிய 2 லாரி பறிமுதல்

மண் அள்ளிய 2 லாரி பறிமுதல்

மண் அள்ளிய 2 லாரி பறிமுதல்


UPDATED : செப் 12, 2026 11:07 PM

ADDED : செப் 12, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2026 11:07 PM ADDED : செப் 12, 2026 09:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்றத்துார்: சோமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதி அடையாறு கால்வாய் கரையோரம் மண் அள்ளிய இரண்டு லாரிகளை, குன்றத்துார் போலீசார் வழிமறித்து பிடித்தனர். மண் திருடியோர் தப்பினர்.

ரூ.1 லட்சம் கஞ்சா பறிமுதல்

அம்பத்துார்: அம்பத்துார் தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஒபர் பரூக், 26, அபு அனிப், 28, நயீப் அலி, 32, மற்றும் சென்னை, கேளம்பாக்கத்தைச் சேர்ந்த அபுல் ஹாஷன், 23, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1.50 லட்சம் ரூபாய் மதிப்புடைய 13.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தீக்குளித்து பெண் தற்கொலை

கோட்டூர்புரம்: கோட்டூர்புரம், எம்.ஐ.ஜி.,பிளாக், 3வது தெருவைச் சேர்ந்த சாந்தி மகள் சந்தியா, 24. கணவர் அரவிந்த், 29, உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், தாய் வீட்டில் வசித்துவந்த சந்தியா, நேற்று முன்தினம், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.

குட்கா தயாரித்த நால்வர் கைது

முத்தியால்பேட்டை: மண்ணடி, ஆதாம் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா பொருட்களை தயாரித்து விற்றுவந்த ஏழுகிணறு, முதல்வர் குடியிருப்பைச் சேர்ந்த கதிர்வேல், 40, ராயபுரம் சவுந்தரபாண்டியன், 40, யுவராஜ், 45, சுரேஷ், 42, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 80,000 மதிப்புள்ள, 39 கிலோ குட்கா, மிக்ஸி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us