கிரைம் கார்னர்: ரூபாய் நோட்டு மாலை திருடிய 6 பேர் கைது
கிரைம் கார்னர்: ரூபாய் நோட்டு மாலை திருடிய 6 பேர் கைது
UPDATED : செப் 18, 2026 10:07 PM
ADDED : செப் 18, 2026 07:53 PM
தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 33, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டருகே விநாயகர் சிலை வைத்திருந்தார். 10 ஆயிரம் மதிப்புள்ள 100 ரூபாய் நோட்டுகளை மாலையாக சிலைக்கு அணிவித்தார். அதை திருடிய அதே பகுதியைச் சேர்ந்த ரூபன், 20, சந்தோஷ், 19, மற்றும் நான்கு சிறுவர்களை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் 5,100 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
நள்ளிரவில் திருநங்கை தீக்குளிப்பு
வியாசர்பாடி: வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பரணி, 48; திருநங்கை. மது போதையில் வீட்டில் துாங்கியவர், நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பங்குச்சந்தை முதலீடு: மோசடி பெண் கைது
சென்னை : 'ஐ.பி.எல்., பான்ட்' என்ற பங்குச்சந்தை நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும் என ஆசைக்காட்டி, அண்ணா நகரைச் சேர்ந்த பிரியதர்ஷினி, 40, என்பவரிடம் இருந்து 23 லட்சம் ரூபாயை, பூஜா ஜெயின், 39, என்பவர் பறித்தார்.
இதுகுறித்த புகாரை விசாரித்த சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், பூஜா ஜெயினை நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூஜா ஜெயின் மீது கொளத்துார், நுங்கம்பாக்கம், சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் மோசடி வழக்கு உள்ளது .
அதிகாரிக்கு தொல்லை: 'மாஜி' ஊழியர் கைது
சூளைமேடு : சூளைமேடு பகுதியைச் சேர்ந்த , தனியார் நிறுவன மனிதவள மேலாளரா ன 34 வயது பெண், மது அருந்தி பணியில் ஈடுபட்டதால், வளசரவாக்க த்தைச் சேர்ந்த மனோபாலா, 28 , என்பவரை, கடந்தாண்டு நீக்கினார். இதனால் பெண் அதிகாரிக்கு அவ்வப்போது தொந்தரவு தந்துவந்த மனோபாலா, நேற்று முன்தினம், அவரது வீட்டிற்கு தொடர்ந்து 'ஹாலிங் பெல்' அடித்து தொல்லை தந்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த சூளைமேடு போலீசார், மனோபாலாவை நேற்று கைது செய்த னர்.
பைக்கில் சென்று மது விற்றவர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, சால்ட் கோட்ரஸ் பகுதியில் நள்ளிரவு நேரங்களில், பைக்கில் சென்று மது விற்பனையில் ஈடுபட்ட பெரியமேடு, நடேசன் நகரைச் சேர்ந்த ஜான், 50 என்பவரை, பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தண்டையார்பேட்டையில் மது விற்ற தினேஷ், 33, என்பவரும் கைது செய்யப்பட்டார்; 28 மதுபாட்டில்களை பறிமுதலாகின.
போதை மாத்திரை 'சப்ளை' செய்தவர் கைது
கொளத்துார்: 'டெலிகிராம்' செயலி மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்று வந்த, அம்பத்துாரைச் சேர்ந்த மிதன்ராஜ், 22, திருமுல்லைவாயலைச் சேர்ந்த ரூபேஸ்வரன், 22, ஆகியோர், கைது செய்யப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் சென்ற தனிப்படை போலீசார், மாத்திரைகளை சப்ளை செய்த தேஜ்முல் பாக், 30, என்பவரை நேற்று கைது செய்தனர்.
