ADDED : செப் 20, 2026 05:23 PM
அ நிறம் | அளவு
போலீசுக்கு ‘டிமிக்கி’ கொடுத்த ரவுடி கைது
காசிமேடு: திருவொற்றியூர், அப்பர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்த செல்வபதி, 29, கடந்த 2021ல், காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய போலீசாரால், வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்தவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நேற்று முன்தினம் இரவு செல்வபதியை, தனிப்படை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
