ADDED : செப் 26, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
‘ப்ளூடூத் ஸ்பீக்கர்’ திருடிய வாலிபர் கைது
கொத்தவால்சாவடி: தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 32. இவர் கொத்தவால்சாவடி, சின்னதம்பி தெருவில் உள்ள அறையில் தங்கி, லாரி செட்டில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம், அறைக்குள் புகுந்த மர்ம நபர், 5,500 ரூபாய் மதிப்புள்ள ‘ப்ளூடூத் ஸ்பீக்கரைʼ திருடி சென்றது, கண்காணிப்பு கேமராவுடன் இணைக்கப்பட்ட மொபைல் போனில் தெரிய வந்தது.இது குறித்த புகாரை அடுத்து விசாரித்த கொத்தவால்சாவடி போலீசார், திருட்டில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் வாஹித், 26, என்பவரை நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
