ADDED : டிச 20, 2025 06:01 AM
நீதிபதி அறைக்கு
வெடிகுண்டு
மிரட்டல்
சென்னை: சென்னை ஐகோர்டில் உள்ள நீதிபதியின் அறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று காலை 9:30 மணிக்கு வந்த 'இ - மெயிலில்' மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் அங்கு போலீசார் சோதனையிட்டனர். இதில், வெடிகுண்டு ஏதும் இல்லை எனவும், வெறும் புரளி எனவும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ரேஷன் கடை
ஊழியர்கள் மீது
தாக்குதல்
புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில், டேனியல், 50, கலையரசன், 53 ஆகிய இருவரும் பணியாற்றுகின்றனர். இவர்களை, நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த இருவர், ரேஷன் பொருட்களை திருடுவதாகக் கூறி தாக்கியுள்ளனர். போலீசாரின் விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது வழக்கறிஞர் விஜய், சினிமா துணை நடிகர் பிரதீப் என, தெரிய வந்தது. நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
பள்ளியிலேயே
ஊழியர்
தற்கொலை
அமைந்தகரை: அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டீவ், 51 என்பவர், அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியின் வேதியியல் ஆய்வக அறையில், நேற்று முன்தினம் தற்கொலை செய்துக் கொண்டார். இவர் அதே பள்ளியில் ஆய்வக உதவியாளராக இருந்தார். முடக்கு வாத நோய் பாதிப்பு மற்றும் கடன் பிரச்னையால் தற்கொலை செய்தது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது .
பயணியரிடம்
போன் பறித்தவர்
பிடிபட்டார்
ஆவடி: ஆவடியைச் சேர்ந்தவர் சல்மான், 26. இவர், செப்., 12ம் தேதி இரவு மின்சார ரயிலின் கதவோரம் நின்றபடி பயணித்தார். அம்பத்துார் மேம்பாலத்தை ரயில் கடந்த போது, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 25 என்ப வர், தண்டவாளத்தின் அருகே நின்று, சல்மானின் மொபைல் போனை பறித்து சென்றார். இது குறித்து விசாரித்த ஆவடி ரயில்வே போ லீசார், விக்னேஷை நேற்று கைது செய்தனர்.
