கிரைம் பாயின்ட் :வீட்டின் பூட்டை உடைத்து திருடியவர் சிக்கினார்
கிரைம் பாயின்ட் :வீட்டின் பூட்டை உடைத்து திருடியவர் சிக்கினார்
ADDED : பிப் 10, 2026 06:14 AM

திருவொற்றியூர்: திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்தவர் நந்தினி, 32. கடந்த 7ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து 2.5 சவரன் நகை, 190 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். விசாரித்த சாத்தாங்காடு போலீசார் திருட்டில் ஈடுபட்ட, திருவொற்றியூர், அண்ணாமலை நகரைச் சேர்ந்த சுதாகர், 29, என்பவரை, நேற்று கைது செய்தனர். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பெண்களிடம் அத்துமீறியவர் பிடிபட்டார்
நொளம்பூர்: நொளம்பூர் மற்றும் முகப்பேர் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம், முகவரி கேட்பதுபோல நெருங்கிய நபர் ஒருவர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக வந்த புகார்களை அடுத்து, திருமங்கலம் மகளிர் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். இதில், நொளம்பூரைச் சேர்ந்த பயாஸ் அகமது, 45, என்பது தெரிந்தது. போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.
ஹோட்டலில்
'ஓசி' சாப்பாடு
இளசுகள் ரவுடியிசம்
கொடுங்கையூர்: கொடுங்கையூர், மீனாம்பாள் சாலை பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் பாலா, 33. நேற்று முன்தினம் நள்ளிரவு மதுபோதையில் வந்த மூவர், சாப்பிட்டு பணம் தராததோடு, மாமூல் கேட்டு பாலாவை தாக்கியுள்ளனர்.
இது குறித்து விசாரித்த கொடுங்கையூர் போலீசார், கொடுங்கையூர், விவேகானந்தா நகரை சேர்ந்த நாராயணன், 19, வசந்த், 19 ஆகியோரை நேற்று கைது செய்தனர். ஜெய் ஆகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
