UPDATED : ஆக 06, 2026 09:28 PM
ADDED : ஆக 06, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
சைதாப்பேட்டை: சைதாப்பேட்டை, கோதமேடு பகுதியைச் சேர்ந்த 33 வயது கர்ப்பிணி, இரு தினங்களுக்கு முன், வீடு அருகே சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வீரா, 27, என்பவர் போதையில், அவரிடம் தகராறில் ஈடுபட்டு, தாக்கி தள்ளிவிட்டார். பெண்ணின் மாமியாரையும் தாக்கி, பிடிக்க முயன்ற பகுதி மக்களையும் கத்தரிகோலை காட்டி மிரட்டினார். புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார், வீராவை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
