UPDATED : செப் 03, 2026 09:36 PM
ADDED : செப் 03, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
முத்தியால்பேட்டை: பிராட்வே, தையப்பன் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஷெரிப், 47; கார் ஓட்டுநர்.
கடந்த மாதம் 6ம் தேதி முன்விரோதம் காரணமாக, முகமது ஷெரிபை வெட்டிக் கொல்ல முயன்ற, மண்ணடியைச் சேர்ந்த சாதிக் அலி, 45, பைசல் ரகுமான், சத்யநாராயணன், 19, உட்பட ஐந்து பேர் முத்தியால்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த ஆலந்துாரைச் சேர்ந்த ஆனந்த நாராயணன், 21, பாரத், 25, மதுரையைச் சேர்ந்த சிவக்குமார், 31, ஆகியோர் நேற்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
