ADDED : ஏப் 29, 2026 02:53 AM
அ நிறம் | அளவு
திருவொற்றியூர்: திருவொற்றியூர், நேதாஜி நகர், 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் தென்னை மரத்தில் காகம் ஒன்று, நேற்று காற்றாடி நுாலில் சிக்கி உயிருக்கு போராடியது.
இதை பார்த்த அப்பகுதி மக்கள், திருவொற்றியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஏணி மூலம் ஏறி, காற்றாடி நுாலில் சிக்கி தொங்கிக் கொண்டிருந்த காகத்தை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து மீண்டும் பறக்க விட்டனர்.
