/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விநாயகர் சதுர்த்தி கோயம்பேடு சந்தையை சுற்றி நெரிசல்
/
விநாயகர் சதுர்த்தி கோயம்பேடு சந்தையை சுற்றி நெரிசல்
விநாயகர் சதுர்த்தி கோயம்பேடு சந்தையை சுற்றி நெரிசல்
விநாயகர் சதுர்த்தி கோயம்பேடு சந்தையை சுற்றி நெரிசல்
ADDED : ஆக 26, 2025 12:29 AM

கோயம்பேடு,
நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், நேற்று கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் கூட்டம் அதிகரித்து, சந்தையை மற்றும் அதை சுற்றி உள்ள சாலைகளில் நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.
பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கோயம்பேடு சந்தையில் சிறப்பு சந்தை அமைப்பது வாடிக்கை.
கொரோனா பரவலுக்கு முன் விநாயகர் சதுர்த்திக்கும் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டது.
அதன் பின், கொரோனா, மெட்ரோ ரயில் பணி என, விநாயகர் சதுர்த்திக்கு சிறப்பு சந்தை அமைப்பது கைவிடப்பட்டது.
தற்போது, கோயம்பேடு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருவதால், சாலைகள் குறுகலாக மாறி உள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் மற்றும் நுகவோர்கள் கூட்டம் மற்றும் வாகன வரத்தும் அதிகரித்து காணப்பட்டது.
இதனால், நெற்குன்றத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் மாதா கோவில் தெரு, கோயம்பேடு சந்தை சாலைகள், நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கடும் நெரிசல் ஏற்பட்டது.
பழங்கள் :
இதையடுத்து, பூஜைக்கு பயன்படுத்தப்படும் விளாம்பழம், கொய்யா, சோளம், பேரம்பழம், கலாக்காய் உள்ளிட்டவை வரத்து அதிகரித்து காணப்பட்டது.
விளாம்பழங்கள் கிலோ 50 ரூபாய்க்கும், பேரிக்காய் 60 - 70 ரூபாய்க்கும் விற்பனையானது. காட்டு கல்லக்காய் ஒரு படி - 150 ரூபாய்க்கும், பேரம்பழம் ஒரு படி - 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும், மொத்த விற்பனையில் ஆப்பிள் 150 - 200 ரூபாய்க்கும், ஆரஞ்சு 60 - 70; சாத்துக்குடி 35 - 40; அண்ணாசி பழம் 60; கொய்யா 50 ரூபாய்க்கும், மாதுளம் கிலோ 200 - 300; பன்னீர் திராட்டை - 65 ரூபாய்க்கும் விற்பனையானது.
பூக்கள் :
இதேபோல், பூக்கள் வரத்து அதிகரித்து, வியாரிகள் கூட்டம் அதிகரித்து, விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது.
இதில், நேற்று முன்தினம் 240 - 260 ரூபாய்க்கு விற்பனையான சாமந்தி நேற்று 250 - 300 ரூபாய்க்கும் விற்பனையானது.
அதேபோல், 1000 ரூபாய்க்கு விற்பனையான மல்லி பூ நேற்று 900 - 1200 ரூபாய்க்கும்; 400 - 450 ரூபாய்க்கு விற்பனையான முல்லை பூ நேற்று 600 - 700 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும், 350 - 400 ரூபாய்க்கு விற்பனையான ஜாதி மல்லி 400 - 450 ரூபாய்க்கும்; 200 - 250 ரூாய்க்கு விற்பனையான அரளி 300 - 350 ரூபாய்க்கும்; 140 - 200 ரூபாய்க்கு விறப்னையான சாக்லேட் ரோஸ், 200 - 240 ரூபாய்க்கும்; 140 ரூபாய்க்கு விற்பனையான பன்னீர் ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்பனையானது.
அத்துடன், 800 ரூபாய்க்கு விற்பனையான கனகாம்பரம் 800 - 1000 ரூபாய்க்கும்; 240 - 260 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி பூ 300 - 350 ரூபாய்க்கும் விற்பனையானது.
படம் மட்டும்/ பிராட்வே
படம் மட்டும்/திருவொற்றியூர் பேசின் சாலை
படம் மட்டும்/: திருவான்மியூர்
கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துக்குமார் கூறியதாவது : கோயம்பேடு சந்தையில், பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட லாரிகள் வரத்து அதிகமாக இருக்கும். அவற்றை சீர் செய்ய போக்குவரத்து போலீசார் போதிய அளவில் ஈடுபடுத்தப்படவில்லை. அங்காடி நிர்வாக குழு சார்பில், வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குப்படுத்தவில்லை. இதனால், நெரிசல் ஏற்பட்டது. நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் கூறியதாவது: சந்தையை சுற்றி உள்ள சாலைகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. மேலும், 'ஈ' சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால், நெரிசல் ஏற்படட்து. வாகனங்களை ஒழுங்குப்படுத்த 25 காவலாளிகள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து போலீசாரும் அதிகாலை முதல் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.