/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., ஆய்வகங்களை பார்வையிடலாம்
/
சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., ஆய்வகங்களை பார்வையிடலாம்
சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., ஆய்வகங்களை பார்வையிடலாம்
சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., ஆய்வகங்களை பார்வையிடலாம்
ADDED : செப் 25, 2024 12:37 AM
சென்னை, ''சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவன தினத்தை முன்னிட்டு, வரும், 26ம் தேதி சென்னை தரமணியில் உள்ள ஆய்வகங்களை மக்கள் பார்வையிடலாம்,'' என, கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குனரும், சி.எஸ்.ஐ.ஆர்., சென்னை வளாக ஒருங்கிணைப்பு இயக்குனருமான என்.ஆனந்தவல்லி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் நிறுவன தினம், வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சி.எஸ்.ஐ.ஆரின்., கீழ், நாடு முழுதும் 37 ஆய்வகங்கள் செயல்படுகின்றன. அவை அறிவியல், கட்டுமானம், தோல் உட்பட பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன.
சென்னை தரமணியில் சி.எஸ்.ஐ.ஆர்., - எஸ்.இ.ஆர்.சி., எனப்படும் கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம் உள்ளது.
இந்த வளாகத்தில் இது தொடர்பான பல ஆய்வகங்கள் உள்ளன.
இவை எலக்ட்ரானிக்ஸ், அறிவியல் உபகரணங்கள், சுற்றுச்சூழல், உலோகவியல், மின் வேதியியல் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகின்றன.
சி.எஸ்.ஐ.ஆர்., நிறுவன தினத்தை முன்னிட்டு, மேற்கண்ட ஆய்வகங்களையும், சென்னை திரிசூலத்தில் அமைந்துள்ள கோபுர வடிவ கட்டுமானங்களின் சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தையும், மக்கள் பார்வையிடலாம்.
அனைத்து ஆய்வகங்களும் பொது மக்களுக்கு காலை, 9:30 மணி முதல் மாலை, 3:00 மணி வரை திறந்திருக்கும்.
இதன் வாயிலாக, ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் அறிவியல் பணிகளை காணவும், சி.எஸ்.ஐ.ஆர்., ஈடுபட்டுள்ள ஆராய்ச்சிகளை பற்றியும் அறியலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.