/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் தற்கொலை
/
சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் தற்கொலை
ADDED : நவ 14, 2025 02:35 AM
சென்னை: எண்ணுார் துறைமுக சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் குஷால் சதுர்வேதி, 25; சென்னை எண்ணுார் துறைமுகத்தில் சுங்கத்துறை இன்ஸ்பெக்டர்.
திருமணமாகாத இவரும், இவரது நண்பரும், சுங்க அதிகாரியுமான புஷ்பென் டிராவும், மத்திய வருவாய் துறையினருக்கான திருமங்கலத்தில் உள்ள அரசு குடியிருப்பில் தங்கி இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய புஷ்பென் டிரா, வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படவில்லை. கதவை உடைத்து பார்த்தபோது, படுக்கை அறை மின்விசிறியில், குஷால் சதுர்வேதி துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது.
திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

