ADDED : நவ 02, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், குன்றத்துார் அருகே, மணிமங்கலம் ஊராட்சி, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ், 25. நேற்று முன்தினம் மாலை, தெருவில் மகேஷ் நின்றிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், மகேஷை கத்தியால் வெட்டி தப்பி சென்றனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள், மகேஷை மீட்டு படப்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரது தலையில் 12 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மகேஷ் தம்பி சூர்யாவுக்கும் அதே பகுதியைச்சேர்ந்த இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதை மகேஷ் தட்டி கேட்டுள்ளார்.
இதனால், ஏற்பட்ட முன்விரோதத்தில் மகேஷ் வெட்டப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.