/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இறுதி ஊர்வலத்தில் தகராறு இருவருக்கு வெட்டு; 7 பேர் கைது
/
இறுதி ஊர்வலத்தில் தகராறு இருவருக்கு வெட்டு; 7 பேர் கைது
இறுதி ஊர்வலத்தில் தகராறு இருவருக்கு வெட்டு; 7 பேர் கைது
இறுதி ஊர்வலத்தில் தகராறு இருவருக்கு வெட்டு; 7 பேர் கைது
ADDED : செப் 26, 2024 12:19 AM
யானைகவுனி, சவுக்கார்பேட்டை, பி.கே.ஜி.சந்து, 4வது தெருவை சேர்ந்தவர் ராஜூ, 34; மாநகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்.
இவர், அப்பகுதியில் உள்ள அருள் என்பவரின் இறுதிச்சடங்கிற்கு சென்றபோது, அங்கு நடனமாடி கொண்டிருந்த கிேஷார், அப்பு, நித்திஷ், ஜெகதீஷ், கலைவாணன், பிரீத்குமார், கார்த்திக் ஆகிய வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது.
இறுதி ஊர்வலம் முடிந்தநிலையில், ராஜுவை அந்த வாலிபர்கள் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்தார்.
தடுக்க வந்த ராஜுவின் நண்பர் ேஹமந்த் என்பவருக்கும், தலையில் வெட்டு விழுந்தது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும், அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த யானைகவுனி போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட, சவுக்கார்பேட்டை, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வாலிபர்கள் ஏழு பேரையும் கைது செய்து, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் பிடியில் இருந்து தப்பித்து ஓடும்போது தவறி விழுந்ததில், சரித்திர பதிவேடு குற்றவாளியான அப்பு, 22, ஜெகதீஷ், 26, ஆகியோருக்கு, வலது கையில் அடிபட்டது. இருவருக்கும் கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.