/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'டிட்வா' புயல் எதிரொலி: காசிமேடில் மீன் வரத்து 'டல்'
/
'டிட்வா' புயல் எதிரொலி: காசிமேடில் மீன் வரத்து 'டல்'
'டிட்வா' புயல் எதிரொலி: காசிமேடில் மீன் வரத்து 'டல்'
'டிட்வா' புயல் எதிரொலி: காசிமேடில் மீன் வரத்து 'டல்'
ADDED : டிச 08, 2025 05:47 AM

சென்னை: 'டிட்வா' புயல் எதிரொலியால், காசிமேடில் மீன்வரத்து வெகுவாக குறைந்தது. ஐ - வவ்வால் மீன் வகை கிலோ 1,600 ரூபாய்க்கு விற்பனையானதால், மீன்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில், 'டிட்வா' புயல் எதிரொலியால் குறைவான எண்ணிக்கையிலேயே, விசைப் படகுகள் கரை திரும்பின. இதன் காரணமாக, மீன் வரத்து வெகு குறைவாகவே காணப்பட்டது.
இதனால், நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில், ஆர்வமுடன் மீன் வாங்க வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர். குறிப்பாக, ஐ - வவ்வால், கிலோ 1,600 ரூபாய் வரை விற்கப்பட்டது. அதிக மவுசு கொண்ட, வஞ்சிரம் மீன், கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனையானது.
வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து, இந்த மாதம் முழுதும், புயல், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மீன்களின் விலை உயர்வாகவே இருக்கும் என, மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், வஞ்சிரம், வவ்வால், சங்கரா, இறால் போன்ற மீன்கள் வரத்து கணிசமாக இருந்தது. விலை உயர்வால், அதிர்ச்சியடைந்த மீன் பிரியர்கள், விரும்பிய மீன்களை வாங்க முடியவில்லை என, கவலை தெரிவித்தனர்.

