/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் வரும் 6ல் 'சைக்ளோத்தான்' போட்டி
/
இ.சி.ஆரில் வரும் 6ல் 'சைக்ளோத்தான்' போட்டி
ADDED : அக் 01, 2024 12:21 AM
இ.சி.ஆரில் வரும் 6ல் 'சைக்ளோத்தான்' போட்டி
மாமல்லபுரம், அக். 1-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன், ெஹச்.சி.எல்., குழுமம் இணைந்து, வரும் 6ம் தேதி, 'சென்னை சைக்ளோத்தான் - 2024' போட்டியை, இ.சி.ஆர்., எனும் கிழக்கு கடற்கரை சாலையில் நடத்துகிறது. கானத்துார் மாயாஜால் திரையரங்க பகுதியில் துவங்கி மாமல்லபுரம் அரசு மருத்துவமனை சந்திப்பு வரை போட்டி நடக்கிறது.
இதில், 18 - -35 வயதுடைய தொழில்முறை வீரர்களுக்கு 55 கி.மீ.,யும், அமெச்சூர் வீரர்களுக்கு 55 கி.மீ., மற்றும் 24 கி.மீ., போட்டிகள் நடைபெற உள்ளன. மேலும், மாஸ்டர்ஸ் பிரிவில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கு 24 கி.மீ.,யும், 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு 15 கி.மீ., பிரிவுகளிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து, கானத்துார் - மாமல்லபுரம் பூஞ்சேரி சந்திப்பு இடையே, 6ம் தேதி காலை 4:00 - 10:00 மணி வரை, இ.சி.ஆரில் போக்குவரத்து தடைசெய்யப்படுவதாக, போலீசார் அறிவித்துள்ளனர்.