ADDED : நவ 20, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க. நகர், திரு.வி.க., நகர், வாசுதேவன் முதல் தெருவில் முதல் மாடியில் வசிப்பவர் உமாபதியின் மனைவி கவுரி, 44. நேற்று மாலை 5:00 மணிக்கு வீட்டின் வெளியே உள்ள குளியலறைக்கு, கவுரி குளிக்கச் சென்றார்.
அப்போது திடீரென சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீடு முழுதும் எரிந்து கொண்டிருந்தது. வீட்டில் இருந்த சமையல் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது தெரிந்தது.
செம்பியம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் சென்ற வீரர்கள் தீயை அணைத்தனர். தீயில் வீட்டில் இருந்த மின் சாதன பொருட்கள், துணி மணிகள், கட்டில் எரிந்துவிட்டன. யாருக்கும் காயமில்லை. சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் பெறப்படவில்லை.

