ADDED : பிப் 03, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தினர், எஸ்.எஸ்.ராஜன் கோப்பை, மாவட்டங்களுக்கு இடையிலான 'டி- 20' கிரிக்கெட் போட்டிகளை, பல்வேறு மாவட்டங்களில் நடத்தினர்.
நேற்று முன்தினம், சேலத்தில் நடந்த இறுதிப் போட்டியில், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை அணிகள் எதிர்கொண்டன.
முதல் பேட் செய்த ராணிப்பேட்டை அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 150 ரன்களை அடித்தது. அணியின் வீரர் ரகுமான் 78 ரன்களை அடித்தார். அடுத்து பேட் செய்த செங்கல்பட்டு அணி, 16 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழந்து, 152 ரன்களை அடித்து வெற்றி பெற்றது.

