/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகர் பெருமாள் பிரம்மோற்சவம் பட்டாபிஷேகம்
/
தி.நகர் பெருமாள் பிரம்மோற்சவம் பட்டாபிஷேகம்
ADDED : அக் 12, 2024 12:42 AM
சென்னை, சென்னை, தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், திருமலையில் நடப்பது போல, ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விமரிசையாக நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவம், கடந்த 3ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் துவங்கி, இன்று வரை நடக்கிறது. கடந்த 4ம் தேதி முதல், பல அவதார வாகனங்களில் எழுந்தருளி, பெருமாள் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும், பெருமாள் காட்சியளித்தார்.
நேற்று, அஸ்வ வாகன புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவத்தின் கடைசி நாளான இன்று காலை, சக்ர ஸ்நானம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, பட்டாபிஷேகம் நடக்கிறது.