/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பூந்தமல்லி - குமணன்சாவடி சாலையில் தினமும் நெரிசல்
/
பூந்தமல்லி - குமணன்சாவடி சாலையில் தினமும் நெரிசல்
ADDED : டிச 09, 2024 03:59 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில் இருந்து குன்றத்துார் செல்லும் 7 கி.மீ., துார சாலை உள்ளது.
இது, பரங்கிமலை - பூந்தமல்லி சாலை, மாங்காடு - முகலிவாக்கம் சாலை, குன்றத்துார் -- போரூர் சாலையை இணைக்கிறது.
இந்த சாலை குறுகலாக இருப்பதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, 'பிக் ஹவர்ஸ்' நேரங்களில் கடும் போக்குவரத்து ஏற்படுகிறது.
குறிப்பாக, குமணன்சாவடி அருகே கங்கையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் பகுதியில், கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு தானியங்கி சிக்னல் அமைத்து, போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்தி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும். மேலும், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.