/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை இணைப்பு சேதம் மேன்ஹோலில் வெளியேறும் கழிவுநீர்
/
பாதாள சாக்கடை இணைப்பு சேதம் மேன்ஹோலில் வெளியேறும் கழிவுநீர்
பாதாள சாக்கடை இணைப்பு சேதம் மேன்ஹோலில் வெளியேறும் கழிவுநீர்
பாதாள சாக்கடை இணைப்பு சேதம் மேன்ஹோலில் வெளியேறும் கழிவுநீர்
ADDED : ஏப் 25, 2025 12:25 AM

புழுதிவாக்கம், பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு, அமைந்துள்ள ராமலிங்கா நகர் பிரதான சாலை, மிக முக்கியமான போக்குவரத்து உடையது.
இச்சாலையில், புழுதிவாக்கத்தின் பிரதான பாதாள சாக்கடை இணைப்பு செல்கிறது. இக்குழாய், அடிக்கடி சேதமடைந்து, அடைப்பு ஏற்பட்டு வந்தது.
அதனால், 'மேன்ஹோல்' வாயிலாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவது தொடர்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, குழாய் சேதமடைந்து ஏற்பட்ட பள்ளத்தால், வாகனங்கள் செல்ல வழியில்லாமல் வாகன ஓட்டிகள், நேற்று காலை அவதியடைந்தனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது, 'இது, தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தினர், தங்களது இணைய இணைப்பிற்காக பள்ளம் தோண்டும் போது ஏற்பட்ட சேதமாகும். குறிப்பிட்ட நிறுவன அதிகாரிகளிடம் பேசி, அதை சீர்செய்ய உத்தரவிட்டுள்ளோம்' என்றார்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரியிடம் கேட்டபோது, 'உடனடியாக சேதமடைந்துள்ள குழாயை சீர்செய்ய, உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இனி, இதுபோன்று சேதம் அடையாமல் பணி புரிவோம்' என்றார்.