/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை பொருளுடன் டான்சர் சிக்கினார்
/
போதை பொருளுடன் டான்சர் சிக்கினார்
ADDED : அக் 25, 2025 11:30 PM

திருவள்ளூர்: போதைப் பொருளுடன் பிரபல டான்சர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் இன்ஸ்பெக்டர் பாரூக் தலைமையிலான தனிப்படை போலீசார், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெங்கத்துாரில், கடந்த 23ம் தேதி நள்ளிரவு 12:00 மணியளவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 'ஹோண்டா டியோ' ஸ்கூட்டரில் வந்த இளைஞரை மடக்கி விசாரித்தனர். அவர், முரண்பாடாக பதில் அளிக்கவே, அவரை சோதனை செய்ததில், 55 கிராம் 'மெத்ஆம்பெட்டமைன்' போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், சென்னை ராமாபுரம், முல்லை நகரைச் சேர்ந்த சிபிராஜ், 22, என்பது தெரிய வந்தது. இவர், 'இன்ஸ்டாகிராம்' பிரபல டான்சர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், சிபிராஜை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

