/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பால் ஆபத்து
/
அண்ணா பிரதான சாலையில் வாகன ஆக்கிரமிப்பால் ஆபத்து
ADDED : செப் 19, 2024 12:32 AM

நெசப்பாக்கம்,
கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகர், அசோக் நகர், விருகம்பாக்கம், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் முக்கிய பேருந்து சாலையாக, அண்ணா பிரதான சாலை உள்ளது.
இருவழிப் பாதையாக உள்ள இச்சாலை, 1.3 கி.மீ., நீளம் மற்றும் இருபுறம், தலா 35 அடி அகலம் உடையது. இந்நிலையில், இச்சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சாலை ஓரத்தில், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. அத்துடன்,'பீக் ஹவரில்' கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
எம்.ஜி.ஆர்., நகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நிறுத்தப்பட்டுள்ள லோடு வேன்களால், பள்ளிக்கு வரும் மாணவ - மாணவியர் சிரமப்படுகின்றனர்.
எனவே, சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.