/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கம்பங்களில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கேபிள்களால் வேளச்சேரியில் ஆபத்து
/
கம்பங்களில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கேபிள்களால் வேளச்சேரியில் ஆபத்து
கம்பங்களில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கேபிள்களால் வேளச்சேரியில் ஆபத்து
கம்பங்களில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கேபிள்களால் வேளச்சேரியில் ஆபத்து
ADDED : ஜூலை 14, 2025 02:13 AM
அடையாறு:வேளச்சேரியில், விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும்முன், கம்பங்களில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கேபிள்களை அகற்ற வேண்டும் என, தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அடையாறு மண்டல குழு கூட்டம், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில் நடந்தது. இதில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வடிகால், தெருவிளக்கு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக, 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஆனந்தம், 176வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வேளச்சேரியில், முறையாக அனுமதி பெறாமல் கம்பங்களில் ஆபத்தான நிலையில் கட்டப்பட்ட கேபிள்களை அகற்ற வேண்டும்.
புதுப்பிக்கப்பட்ட சாலைகளில் வேகத்தடை அமைக்காததால் விபத்துகள் நடக்கின்றன. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கதிர் முருகன், 170வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: மழைநீர் வடிவாலில் 24 மூடியும், கழிவுநீர் குழாயில் 12 மூடியும் உடைந்துள்ளன. அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அச்சப்படுகின்றனர்.
கோட்டூர்புரம் மின் வாரிய அலுவலகத்தில் ஆறு மாதமாக அதிகாரி இல்லாததால், யாரை தொடர்பு கொள்ள வேண்டுமென தெரியவில்லை.
சுபாஷினி, 173வது வார்டு காங்., கவுன்சிலர்: வார்டில் பொறியாளர் நியமிக்கப்படாததால் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. காந்திநகர் விளையாட்டு மைதானத்தில் காவலாளி, துாய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
ராதிகா, 174வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: சாஸ்திரி நகரில் மழைநீர் வடிகால் பணி முடியாததால், பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
மகேஸ்வரி, 175வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜெனரேட்டர் கேட்டு மூன்றாண்டு ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. வேளச்சேரி ஏரியில் முறையாக ஆகாய தாமரை அகற்றுவதில்லை.
கயல்விழி, 179வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: திருவான்மியூர் மயானத்தில் உள்ள இடப்பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும். திடீர் நகரில் ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்.
கீதா, 171வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வார்டு அலுவலக வளாகத்தில் குவித்து வைத்துள்ள டயர், மெத்தை உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்படாததால் தீ விபத்து நடந்தது. அங்குள்ள கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.