/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தை அமாவாசை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம்
/
தை அமாவாசை முன்னிட்டு முன்னோருக்கு தர்ப்பணம்
ADDED : பிப் 10, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தை அமாவாசை அன்று, மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் ஆசியால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
எனவே, தை அமாவாசையில் முன்னோருக்கு திதி கொடுத்து ஆசி பெறுவது வழக்கத்தில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை தர்ப்பணம் தர முடியாதோர், ஆண்டுக்கு ஒருமுறை வரும் தை அமாவாசையில் தர்ப்பணம் கொடுத்து, அனைத்து மாதத்திலும் தர்ப்பணம் செய்த பலனை பெறலாம் எனவும் கூறப்படுகிறது.
அதன்படி, தை அமாவாசையான நேற்று, சென்னை நகரில் உள்ள கோவில்கள், கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். பலர் வஸ்திர தானம், அன்னதானம் செய்து வழிபட்டனர்.
- -நமது நிருபர்- -