/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆண்டவர் கோவிலில் கெஜலட்சுமி தரிசனம்
/
ஆண்டவர் கோவிலில் கெஜலட்சுமி தரிசனம்
ADDED : அக் 08, 2024 12:29 AM

சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணிவரையிலும், சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது.
நேற்று மாலை 'சக்தி' கொலுவில் அம்பாள் கெஜலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது.
அதைத்தொடர்ந்து, மாலை சிவாலய நாட்டியாலயா மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு, நாகை முகுந்தனின் பக்திச் சொற்பொழிவு நடந்தது.
தமிழக பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் வகையில், 'சக்தி' கொலு வைக்கப்பட்டுள்ளது. நம் வாழ்கையில் நடக்கும் நிகழ்வுகளை, கதைகளாக கொலு பொம்மைகள் பிரதிபலிக்கின்றன.
திருமண வைபவம், வளைகாப்பு, பழங்கால கடைகள், கிராமத்து சூழல், கிரிக்கெட் விளையாட்டு, சுவாமி வீதி உலா, திருக்கயிலாயம், அஷ்ட லட்சுமிகள், தசாவதாரம், கல்விச்சாலை, சீதா கல்யாணம் உள்ளிட்டவை பக்தர்களை கவர்ந்து வருகின்றன.