/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாமியாரை கொன்று நாடகமாடிய மருமகள், கள்ளக்காதலனுடன் கைது
/
மாமியாரை கொன்று நாடகமாடிய மருமகள், கள்ளக்காதலனுடன் கைது
மாமியாரை கொன்று நாடகமாடிய மருமகள், கள்ளக்காதலனுடன் கைது
மாமியாரை கொன்று நாடகமாடிய மருமகள், கள்ளக்காதலனுடன் கைது
ADDED : டிச 15, 2024 12:09 AM

நெரும்பூர், கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொன்று, தற்கொலை செய்ததாக நாடகமாடிய மருமகள் உள்ளிட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த, நெரும்பூரைச் சேர்ந்தவர் லட்சுமி, 50. கணவர் இறந்த நிலையில், மகன் ராஜசேகருடன் வசித்தார்.
கடந்த 9ம் தேதி மாலை, தனக்கு உடல்நிலை சரியில்லையென, வேறு ஊரில் வசிக்கும் மகள் சுகந்தியிடம், மொபைல்போனில் தெரிவித்துள்ளார்.
மறுநாள் காலை, சுகந்தியின் கணவர் குமார் வந்து பார்த்தபோது, வீட்டின் பின்புற மாட்டுக்கொட்டகையில், லட்சுமி துாக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார்.
திருக்கழுக்குன்றம் போலீசார் தற்கொலை வழக்கு பதிந்து, பிரேத பரிசோதனைக்காக உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், லட்சுமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இந்த நிலையில், ராஜசேகரின் மனைவி அமுல், 38, அவரது தோழி பாரதி, 34, இவ்விருவரின் கள்ளக்காதலனான, அதே ஊரைச் சேர்ந்த சரவணன், 40, ஆகியோர், நெரும்பூர் கிராம நிர்வாக அலுவலர் மகேஷிடம் சரணடைந்தனர்.
இவர்கள் திருப்போரூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் தெரிய வந்ததாவது:
லட்சுமியின் மகன் ராஜசேகர் விவசாய தொழில் தொடர்பாக, தொடர்ந்து நீண்டதுார பகுதிகளுக்கு சென்றுள்ளார். இவரது மனைவி அமுலுக்கும், சரவணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளனர்.
அதேபோன்று பாரதிக்கும், சரவணனுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டுள்ளது. அமுலின் கள்ளத்தொடர்பை அறிந்த மாமியார் லட்சுமி, அவரை கண்டித்துள்ளார்.
இதனால், சரவணனுடன் சேர்ந்து அவர்கள் லட்சுமியின் கழுத்தை நெரித்து கொன்று, தற்கொலை செய்தது போல் நாடகமாடியுள்ளனர்.
இவ்வாறு விசாரணையில் தெரிய வந்தது.