/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.ஏ.வி., பள்ளிக்கு குண்டு மிரட்டல் மாணவரிடம் போலீஸ் விசாரணை
/
டி.ஏ.வி., பள்ளிக்கு குண்டு மிரட்டல் மாணவரிடம் போலீஸ் விசாரணை
டி.ஏ.வி., பள்ளிக்கு குண்டு மிரட்டல் மாணவரிடம் போலீஸ் விசாரணை
டி.ஏ.வி., பள்ளிக்கு குண்டு மிரட்டல் மாணவரிடம் போலீஸ் விசாரணை
ADDED : அக் 10, 2024 12:51 AM
கோபாலபுரம், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை 8:26 மணிக்கு, தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், கோபாலபுரம் டி.ஏ.வி., ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறினார்.
மேலும், காலை 10:00 மணிக்கு வெடிக்கப்போவதாகவும் கூறி, இணைப்பை துண்டித்தார். இதையடுத்து, ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு, 8:35 மணிக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் பாண்டியன் உதவியுடன், பள்ளி முழுதும் சோதனை செய்தனர். இரண்டு மணி நேர சோதனையில் எதுவும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, மிரட்டல் விடுத்த மொபைல் போன் எண் பற்றி விசாரித்தபோது, பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த, 15 வயது சிறுவன் என்பதும், மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனையும், அவரது பெற்றோரையும் பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
2 பள்ளிகளுக்கு மிரட்டல்
கிழக்கு தாம்பரம், எம்.இ.எஸ்., சாலையில், கிறிஸ்தவ கல்லுாரி வளாகத்தில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, அதன் பிரத்யேக மின்னஞ்சல் முகவரிக்கு மிரட்டல் வந்தது.
இதேபோல், குன்றத்துார் அடுத்த பூந்தண்டலம் சாய்ராம் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று மதியம், 2:00 மணிக்கு, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, பண்டரிநாதன் மயில்சாமி என்ற பெயரில் இ - மெயில் வந்தது.
இரு பள்ளிகளிலும், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மூன்று மணி நேர சோதனை செய்தனர். எதுவும் சிக்காததால், அது புரளி என்பது தெரியவந்தது.