/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாவூத் - கீழ்ப்பாக்கம் அணி கால்பந்து போட்டியில் 'டிரா'
/
தாவூத் - கீழ்ப்பாக்கம் அணி கால்பந்து போட்டியில் 'டிரா'
தாவூத் - கீழ்ப்பாக்கம் அணி கால்பந்து போட்டியில் 'டிரா'
தாவூத் - கீழ்ப்பாக்கம் அணி கால்பந்து போட்டியில் 'டிரா'
ADDED : ஏப் 17, 2025 11:52 PM
சென்னை,
சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான முதல் டிவிஷன் போட்டி, அயனாவரம் ஐ.சி.எப்., மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று நடந்த போட்டியில், தாவூத் மெமோரியல், டி.பி.ஒய்.சி., கீழ்ப்பாக்கம் அணிகள் மோதின.
போட்டி துவங்கிய எட்டாவது நிமிடத்தில், தாவூத் அணியின் வீரர் சந்தோஷ், அணிக்காக முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, 30வது நிமிடத்தில், மிட் - திசையில் இருந்த பந்தை கடத்திய சந்தோஷ், அதை அடுத்த கோலாக மாற்றினார்.
தாவூத் அணியின் வலுவைக்கூட்டும் வகையில், அந்த அணியின் தேஜஸ் 46வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் தாவூத் அணி 3 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதி துவங்க, போட்டியில் விறுவிறுப்பும் கூடியது. இதுவரை தடுப்பு ஆட்டத்தில் விளையாடிய டி.பி.ஒய்.சி., அணி, பதிலடி கொடுக்கும் வகையில் காலை சுழற்றியது.
போட்டியின் 48வது நிமிடத்தில் தாவூத் அணியின் தடுப்பை உடைத்த டி.பி.ஒய்.சி., அணியின் சூரியா, முதல் கோல் அடித்தார். தொடர்ந்து 55வது நிமிடத்தில், அதே அணியின் ஜெகன் அடுத்த கோல் அடித்தார்.
பரபரப்பான இந்த ஆட்டம், இறுதி கட்டத்தை நெருங்க, இரு அணிகளின் வீரர்களும் தங்களது இடத்தில், உறுதியாக விளையாடினர்.
இதில் 56வது நிமிடத்தில், டி.பி.ஒய்.சி., அணியின் கிரிஷ் ஒரு கோல் அடித்தார். முடிவில் 3 - 3 என்ற கோல் கணக்கில், போட்டி டிராவில் முடிந்தது.