sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 விதிமீறிய விளம்பர பலகைகளுக்கு சலுகை சரிசெய்ய 6ம் தேதி வரை கால அவகாசம்

/

 விதிமீறிய விளம்பர பலகைகளுக்கு சலுகை சரிசெய்ய 6ம் தேதி வரை கால அவகாசம்

 விதிமீறிய விளம்பர பலகைகளுக்கு சலுகை சரிசெய்ய 6ம் தேதி வரை கால அவகாசம்

 விதிமீறிய விளம்பர பலகைகளுக்கு சலுகை சரிசெய்ய 6ம் தேதி வரை கால அவகாசம்

1


ADDED : மார் 01, 2026 05:39 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:39 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில், விதிமீறி விளம்பர பலகை வைத்தவர்கள், அவற்றை சரிசெய்ய, 6ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி மாநகராட்சி சலுகை அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாநகராட்சியில் விளம்பர பலகை அமைக்க விரும்புவோர், https://erp.chennaicorporation.gov.in/portal/login.jsp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆய்வுக்குபின், உரிமம் வழங்கப்படும்.

விளம்பர பலகைகள், அங்கீகரிக்கப்பட்ட பொருட்களில் அச்சிடப்பட்டதாக இருக்க வேண்டும். சுழற்சி முறையில் காண்பிக்கப்படும் போது, ஒவ்வொரு காட்சிக்கும் குறைந்தது, 10 வினாடிகள் மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.

உரிமம் பெற்ற பின், விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட பலகைகள் அனுமதியற்றதாக கருதப்பட்டு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும், ஏற்கனவே உரிமம் பெற்று நிறுவப்பட்டுள்ள விளம்பர பலகைகள், விதிமீறல்களை சரி செய்யவும், வரும் 6ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

வரும் 7ம் தேதி முதல், உரிய உரிமம் இல்லாத அனைத்து விளம்பர பலகைகளும் அங்கீகரிக்கப்படாததாக கருதப்பட்டு, அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான செலவை, கட்டட உரிமையாளரிடமிருந்தும், விளம்பர பலகை அமைத்தவரிடம் இருந்தும் வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் அனுமதி பெறாமலும், அனுமதி பெற்றும், ஏராளமான விளம்பர பலகைகள் ஆபத்தான முறையில் உள்ளன.

அவை, பெரும்பாலும் உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் இருப்பதால், நடவடிக்கை எடுக்காமல், மாநகராட்சி அவகாசம் என்ற சலுகை வழங்கியிருப்பதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டிஉள்ளனர்.






      Dinamalar
      Follow us