/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல குழு தலைவருக்கு கொலை மிரட்டல்?
/
மண்டல குழு தலைவருக்கு கொலை மிரட்டல்?
ADDED : பிப் 24, 2024 12:00 AM

திருவொற்றியூர், திருவொற்றியூர், கிராமத் தெரு, அருவா குளம் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் தி.மு.தனியரசு, 54; திருவொற்றியூர் மண்டல குழு தலைவர்.
இவர், தி.மு.க., கிழக்கு பகுதி செயலராகவும் உள்ளார்.
நேற்று காலை முதல், இவரது வீடு மற்றும் கட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விசாரணையில், போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், கொலை மிரட்டல் விடுத்ததால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது எனக் கூறப்படுகிறது.
தனியரசு, கடந்தாண்டு திருவொற்றியூர், அருவாகுளம் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தபோது, மக்களை மீட்டு உயிர்பலி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்த்தார்.
அதற்காக, அரசு அவருக்கு, அண்ணா விருது வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.