/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேதமான 31 கட்டடத்தை இடிக்க முடிவு
/
சேதமான 31 கட்டடத்தை இடிக்க முடிவு
ADDED : ஜூன் 24, 2025 12:28 AM
அடையாறு, அடையாறு மண்டலத்தில், சாலையில் ஆக்கிரமித்துள்ள சேதமடைந்த 31 கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அடையாறு மண்டலத்தில், 1977 முதல் 2022ம் ஆண்டு வரை கட்டிய, பல்நோக்கு கட்டடம், உரம் தயாரிப்பு கூடம், அங்கன்வாடி மையம், தகன மேடை உள்ளிட்ட 31 கட்டடங்கள் சேதமடைந்து உள்ளன.
இவற்றில், பெரும்பாலானவை சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, மிகவும் சேதமடைந்த, 31 கட்டடங்களை இடிக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பருவமழை துவங்கும் முன் கட்டடங்கள் இடிக்கப்பட்டு, சாலை இல்லாத மாநகராட்சி இடத்தில், அவற்றுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்டப்படும் என, அதிகாரிகள் கூறினர்.