/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.50 லட்சத்தில் 100 கேமரா கிண்டியில் அமைக்க முடிவு
/
ரூ.50 லட்சத்தில் 100 கேமரா கிண்டியில் அமைக்க முடிவு
ரூ.50 லட்சத்தில் 100 கேமரா கிண்டியில் அமைக்க முடிவு
ரூ.50 லட்சத்தில் 100 கேமரா கிண்டியில் அமைக்க முடிவு
ADDED : மே 23, 2025 12:24 AM
கிண்டி, அடையாறு மண்டலம், கிண்டி, மடுவங்கரையில் குற்றங்களை தடுக்கும் வகையில், மாநகராட்சி சார்பில், கூடுதலாக கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நரசிங்கபுரம், கணேசன் நகர், வண்டிக்காரன் தெரு உள்ளிட்ட பகுதிகளின் 25 தெருக்களில், 30 சந்திப்புகளில், 100 கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ், 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஒவ்வொரு தெருவிலும், 100 மீட்டர் துாரம் வரை பதிவு செய்யும் வகையில் கேமரா அமைக்கப்பட உள்ளது. மொத்த பதிவுகளும், 172வது வார்டு அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும்.
மேலும், கேமரா பதிவுகளை, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ரோந்து போலீசார் மொபைல் போன்களில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.