/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கேம்ப் ரோடு உள்ளிட்ட சந்திப்புகளில் 'டிஜிட்டல்' சிக்னல் பொருத்த முடிவு
/
கேம்ப் ரோடு உள்ளிட்ட சந்திப்புகளில் 'டிஜிட்டல்' சிக்னல் பொருத்த முடிவு
கேம்ப் ரோடு உள்ளிட்ட சந்திப்புகளில் 'டிஜிட்டல்' சிக்னல் பொருத்த முடிவு
கேம்ப் ரோடு உள்ளிட்ட சந்திப்புகளில் 'டிஜிட்டல்' சிக்னல் பொருத்த முடிவு
ADDED : ஜூலை 07, 2025 03:49 AM
சேலையூர்:தாம்பரம் - வேளச்சேரி சாலையில், கேம்ப்ரோடு, மகாலட்சுமி நகர், மப்பேடு உள்ளிட்ட மூன்று சந்திப்புகளில், பழைய சிக்னலை அகற்றிவிட்டு, 'டிஜிட்டல்' சிக்னல் பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகரான போக்குவரத்து கொண்டது, தாம்பரம் - வேளச்சேரி சாலை.
கிழக்கு தாம்பரத்தில் இருந்து இதன் வழியாக, சென்னையின் பல்வேறு இடங்களுக்கு, மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை தவிர, தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள், வேன், கார் என, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடக்கின்றன.
இதனால், 24 மணி நேரமும் போக்குவரத்து இருக்கும் முக்கியமான இச்சாலையில், கேம்ப்ரோடு, மகாலட்சுமி நகர், மப்பேடு சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த சிக்னல்கள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், அடிக்கடி பழுதாகி விடுகின்றன. பின், அவற்றை சரிசெய்ய பல நாட்கள் ஆகின்றன.
இதனால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள், ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இந்த சந்திப்புகளில், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
அதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்த மூன்று சந்திப்புகளிலும், பழைய சிக்னல்களை அகற்றிவிட்டு, புதிதாக 'டிஜிட்டல்' சிக்னல் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.