/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற முடிவு
/
துருப்பிடித்த மின்கம்பங்களை மாற்ற முடிவு
ADDED : நவ 19, 2024 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு, அடையாறு மண்டலம், 174வது வார்டு, பெசன்ட்நகரில் பல தெருக்களில் உயரம் குறைவான, துருபிடித்த மின்கம்பங்கள், விளக்குகள் உள்ளன.
இதையடுத்து, 58 புதிய மின்கம்பங்கள் நட்டு, மின்கேபிள் அமைத்து, 30 மற்றும் 100 வாட்ஸ் திறன் கொண்ட எல்.இ.டி., விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு, 21.77 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 176வது வார்டு, வேளச்சேரி பகுதியில், 56 கம்பங்கள் உயரம் குறைவாக, துருபிடித்து உள்ளன. இதற்கு பதில், 7 மீட்டர் உயரத்தில் புதிய மின் கம்பங்கள் நட, 25.24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

