/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏர்போர்ட்டில் சோதனை முடிப்பதில் தாமதம்
/
ஏர்போர்ட்டில் சோதனை முடிப்பதில் தாமதம்
ADDED : பிப் 24, 2026 06:01 AM
சென்னை: சென்னை விமான நிலையம் மூன்று முனையங்களுடன் இயங்கி வருகிறது. 'டி1' மற்றும் 'டி4' உள்நாட்டு முனையங்களாவும், 'டி2' சர்வதேச முனையமாகவும் செயல்படுகின்றன. இங்கு பாதுகாப்பு பணியில் சி.ஐ.எஸ்.எப்., எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பணியில் உள்ளனர்.
பொதுவாக புறப்பாடு பகுதியில் 'எஸ்.எச்.ஏ.,' எனும் பாதுகாப்பு சோதனை பகுதி இருக்கும். இங்கு, தங்களது மொபைல் போன், லேப்டாப், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் 'ட்ரே'வில் வைத்து சோதனை செய்த பின்னே, பயணியர் விமானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.
ஆனால், சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜன., முதல் வாரத்தில் இருந்து சோதனைகளை முடிப்பதில் நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதாக பயணியர் குறை கூறுகின்றனர். 'பீக் ஹவர்' நேரத்தை தாண்டியும் இதே நிலை நீடிப்பதாக பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சி.ஐ.எஸ்.எப்., உயர் அதிகாரிகள் கூறியதாவது:
'பேட்ச்' அடிப்படையில் பாதுகாப்பு பணியில் போதுமான ஆட்கள் உள்ளனர். சர்வதேச பயணியர் திட்டமிட்டு முன்கூட்டியே வந்தால் சோதனையில் எந்த பிரச்னையும் இல்லை. சட்டசபை தேர்தல் வர உள்ளதால் கூடுதலாக கண்காணிக்கிறோம்.
சில பயணியர் சிவில் விமான பாதுகாப்பு பணியகம் குறிப்பிட்ட வரம்பை மீறி பொருட்கள் எடுத்து வருகின்றனர். அவற்றை சோதனை செய்து அனுப்ப நேரம் எடுத்துக் கொள்ளும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

