/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டில்லி 'ஏர் இந்தியா' விமானம் தாமதம்
/
டில்லி 'ஏர் இந்தியா' விமானம் தாமதம்
ADDED : பிப் 18, 2024 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, டில்லி செல்லும் 'ஏர் இந்தியா' விமானம், நேற்று காலை 6:00 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும். இந்த விமானத்தில் பயணிக்க, 158 பேர் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு முன்னதாகவே, விமான நிலையத்திற்கு வந்து விட்டனர்.
இந்த விமானம், வழக்கமாக துபாயில் இருந்து அதிகாலை 4:40 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, மீண்டும் உள்நாட்டு விமானமாக சென்னையில் இருந்து 6:00 மணிக்கு, டில்லிக்கு புறப்படும்.
ஆனால் நேற்று, துபாயில் இருந்து மூன்று மணி நேரம் தாமதமாக வந்து, புறப்பட்டு சென்றது. இதனால், பயணியர், விமான நிலையத்தில் காத்திருந்து அவதிப்பட்டனர்.