/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஹாக்கியில் கேரளாவிற்கு எதிராக கோல் மழை பொழிந்த டில்லி
/
ஹாக்கியில் கேரளாவிற்கு எதிராக கோல் மழை பொழிந்த டில்லி
ஹாக்கியில் கேரளாவிற்கு எதிராக கோல் மழை பொழிந்த டில்லி
ஹாக்கியில் கேரளாவிற்கு எதிராக கோல் மழை பொழிந்த டில்லி
ADDED : நவ 11, 2024 01:25 AM
சென்னை:சென்னை எழும்பூரில், தமிழக ஹாக்கி யூனிட் நடத்தும், 14வது சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடந்து வருகிறது.
இதில் நேற்று முன்தினம் நடந்த 'எப்' பிரிவிற்கான லீக் போட்டியில், கேரளா அணி, டில்லி அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான போட்டியில், துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய டில்லி அணி ஆட்டத்தை தன் வசப்படுத்தியது. ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை பயன்படுத்திய தீராஜ் வட்ஸ், டில்லி அணிக்கு எதிராக முதல் கோலை விளாசினர். தொடர்ந்து 19வது நிமிடத்தில் கோவிந்த் சிங், 22வது நிமிடத்தில் நிதிஷ் அடுத்தடுத்து 'பீல்ட் கோல்' அடிக்க, போட்டி சூடுபிடிக்க துவங்கியது. கேரளாவின் தடுப்பை உடைத்து டில்லியின், தீராஜ் வட்ஸ், 28வது நிமிடத்தில் கிடைத்த அடுத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை, மின்னல் வேகத்தில் மீண்டும் கோலாக மாற்றினார். முதல் பாதியில் டில்லி அணி 4--0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியின் 41வது நிமிடத்தில் நிதிஷ் அடித்த பந்து கோலாக மாற, அடுத்த வினாடியில் கேரளாவின் ரிஷப் ஆனந்த், அணியின் முதல் கோலை பதிவு செய்தார். இதற்கு, டில்லியின் நிதிஷ் அடுத்த வினாடியில் பதிலடி கொடுத்து, ஒரு பீல்ட் கோல் விளாசினர். முடிவில், டில்லி அணி 6 - -1 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
'ஹெச்' பிரிவிற்கான போட்டியில், மணிப்பூர், பீஹார் அணிகள் மோதின. காலி இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தக்கவைக்க போராடிய பீஹார் அணி, மணிப்பூரிடம் 3 - -1 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது. இதனால், மணிப்பூருக்கு காலிறுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.