sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு

/

 பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு

 பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு

 பல்லாவரம் ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு


PUBLISHED ON : மார் 01, 2026 05:44 AM

Google News

PUBLISHED ON : மார் 01, 2026 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாவரம்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், ஜி.எஸ்.டி., சாலையை விரிவுபடுத்தும் வகையிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று துவங்கியது.

பல்லாவரத்தில், குரோம்பேட்டை மார்க்கமான ஜி.எஸ்.டி., சாலையில், அம்மா உணவகம் முதல் துரைப்பாக்கம் சாலை மேம்பாலம் வரை குறுகலாக உள்ளது. இதனால், அந்த இடத்தில், நாள்தோறும் 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வாக, அந்த இடத்தில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, சாலை விரிவாக்கத்திற்கு ஏதுவாக, அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி நேற்று துவங்கியது.






      Dinamalar
      Follow us