/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடையாறு கரையோர ஆக்கிரமிப்பு 38 வீடு இடிக்கும் பணி துவக்கம்
/
அடையாறு கரையோர ஆக்கிரமிப்பு 38 வீடு இடிக்கும் பணி துவக்கம்
அடையாறு கரையோர ஆக்கிரமிப்பு 38 வீடு இடிக்கும் பணி துவக்கம்
அடையாறு கரையோர ஆக்கிரமிப்பு 38 வீடு இடிக்கும் பணி துவக்கம்
ADDED : டிச 31, 2024 12:35 AM

எம்.ஜி.ஆர்., நகர்,
சென்னையில், கூவம், அடையாறு ஆற்றின் கரையோரங்களில், 15,300 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அகற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் அடையாற்றை ஒட்டியுள்ள கானு நகர், சூளைப்பள்ளம், ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் பாலம் வரை உள்ள பகுதி, தாழ்வான பகுதியாக உள்ளது. இதனால், ஆற்றில் வெள்ளம் ஏற்படும் போது, மேற்கண்ட பகுதிகளில் தண்ணீர் சூழ்கிறது.
எனவே, இப்பகுதியில் உள்ளவர்களை மறு குடியமர்வு செய்ய, 'பயோ மெட்ரிக்' பதிவு செய்யும் பணிகள் நடந்தன. இதில், 409 வீடுகள் கணக்கிடப்பட்டு அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி கடந்தாண்டு அக்டோபர் மாதம் எம்.ஜி.ஆர்., நகர் கானு நகரில் துவங்கியது. தொடர்ந்து, அங்கிருந்தோர், பெரும்பாக்கத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்புக்கு மாற்றப்பட்டனர்.
பெரும்பாலான வீடுகள் இடித்து அகற்றப்பட்ட நிலையில், எஞ்சிய 38 வீடுகளை இடித்து அகற்றும் பணி நேற்று நடந்தது.
இதேபோல், சைதாப்பேட்டை பகுதியில் அடையாறு ஆறு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.