/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருந்து கடை உரிமையாளர் கொலை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
மருந்து கடை உரிமையாளர் கொலை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மருந்து கடை உரிமையாளர் கொலை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
மருந்து கடை உரிமையாளர் கொலை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 04, 2024 05:36 AM
எழும்பூர்: மருந்து கடை உரிமையாளர் கொலையை கண்டித்து சென்னை எழும்பூர் பகுதியில் நாடார் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வண்டலூர், ஓட்டேரியில் மருந்துக்கடை உரிமையாளர் வினோத்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். மருந்து கடை உரிமையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என எழும்பூர் , ராஜரத்தினம் மைதானம் அருகில் இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பில் பொதுச்செயலர் பத்மநாபன் தலைமையில் கண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில், வினோத்குமார் கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும். கேளம்பாக்கம், மகாபலிபுரம், செங்கல்ப்ட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள வியாபாரிகளுக்கு ரவுடிகளால் அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.