தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆணவ படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 28, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2024 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில் பிரவீன், 26, என்ற வாலிபர், வேற்று ஜாதி பெண்ணை காதலித்து, கடந்த நவம்பரில் பதிவுத் திருமணம் செய்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் சகோதரர் தினேஷ், தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, கடந்த 24ம் தேதி பிரவீனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இந்த ஆணவப் படுகொலையை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் வி.சி.க., சார்பில், 100க்கும் மேற்பட்டோர், பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றோர் கூறுகையில், ''தமிழகத்தில், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பள்ளிக்கரணை ஜாதி ஆணவப் படுகொலை வழக்கை விரைவில் முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். பிரவீனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us