/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம்
/
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 07, 2025 12:56 AM

மணலி,மணலியில், மத்திய அரசுக்கு சொந்தமான, சி.பி.சி.எல்., எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை செயல்படுகிறது. இங்கு
இதற்காக, பீஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், ஒடிசா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்களை வரவழைத்து, ஒப்பந்த நிறுவனங்கள் அந்த பணிகளை மேற்கொள்ளும்.
இந்நிலையில், திட்டப்பணி, பராமரிப்பு பணிக்கான வேலை வாய்ப்பில், உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனக்கோரி, திருவொற்றியூர் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் தலைமையில், அ.தி.மு.க.,வினர், சி.பி.சி.எல்., சந்திப்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மணலி போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன், முன்னாள் கவுன்சிலர் ஜோசப் உட்பட, 55 பேரை கைது செய்து, மணலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.