/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடுகளால் சுகாதார சீர்கேடு பூந்தமல்லியில் ஆர்ப்பாட்டம்
/
மாடுகளால் சுகாதார சீர்கேடு பூந்தமல்லியில் ஆர்ப்பாட்டம்
மாடுகளால் சுகாதார சீர்கேடு பூந்தமல்லியில் ஆர்ப்பாட்டம்
மாடுகளால் சுகாதார சீர்கேடு பூந்தமல்லியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 17, 2025 12:57 AM

பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சி ரைட்டர் தெருவில், மாடுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி நகராட்சி, 20வது வார்டில் ரைட்டர் தெரு உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த தெருவில், மாடுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ரைட்டர் தெருவில், தனி நபர்கள் சிலர், 150க்கும் மேற்பட்ட மாடுகள், 50க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்க்கின்றனர். அவை, சாலையில் சுற்றித் திரிகின்றன.
அதனால், அச்சாலை முழுதும் மாட்டுச் சாணத்தாலும், கோமியத்தாலும் அலங்கோலமாக உள்ளது. இதனால், சாலை, வீடுகளில் துர்நாற்றம் வீசுவதோடு, ஈக்கள், கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
இந்த சுகாதார சீர்கேட்டால், பல ஆண்டுகளாக அவதிக்குள்ளாகியுள்ளோம். எங்கள் தெருவில் நகராட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்வதே இல்லை.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும், அரசியல் தலையீடு காரணமாக நடவடிக்கை இல்லை. எனவே, திருவள்ளூர் கலெக்டர் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதார சீர்கேட்டை சரிசெய்யவில்லை என்றால், அடுத்த கட்டமாக உண்ணாவிரதம் அல்லது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.