/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்வாரிய ஆபீசை முற்றுகையிட்டு சித்தாலப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்
/
மின்வாரிய ஆபீசை முற்றுகையிட்டு சித்தாலப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஆபீசை முற்றுகையிட்டு சித்தாலப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்
மின்வாரிய ஆபீசை முற்றுகையிட்டு சித்தாலப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2024 12:56 AM

சித்தாலப்பாக்கம், மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர் குடியிருப்பில், 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிவாசிகள், தங்கள் வீடுகளுக்கான மின் கட்டணத்தை, சித்தாலப்பாக்கத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வீடுகளுக்கு மாதாந்திர மின் கட்டணம் அதிகமாக வருவதாகவும், உரிய நாட்களில் மின்கட்டணத்தை கணக்கிடாமல், காலம் தாழ்த்தி கணக்கீடு செய்வதாகவும் கூறி, 25க்கும் மேற்பட்டோர், சித்தாலப்பாக்கம் மின் வாரிய அலுவலத்தை முற்றுகையிட்டு, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
அப்பகுதிவாசிகள் கூறுகையில், “ஒரு மின் விசிறி, இரண்டு டியூப் லைட்டுகள் உள்ள வீட்டிற்கும், 1,000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் வருகிறது. மாதந்தோறும் மின் கட்டணத்தை கணக்கிட வேண்டும். பழைய மின் மீட்டர்களை மாற்றி, புதியவற்றை பொருத்த வேண்டும்,” என்றனர்.