
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிராட்வே, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதையும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும், தடுக்க தவறிய மத்திய அரசையும் கண்டித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், கருப்பு கொடி ஏந்தி, கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு, துணை தலைவர் கோபண்ணா, பொதுச் செயலர்கள் பி.வி.தமிழ் செல்வன், எஸ்.பாஸ்கர், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டெல்லிபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

