டைம்லைன்
தற்போதைய செய்தி
டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
ADDED : நவ 16, 2024 12:50 AM
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
சென்னையின் குடிநீர் தேவையை கருதி எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் கீழ், கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அருகே பேரூரில், 4276.44 கோடி ரூபாய் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை:சென்னை மாநகரின் நீண்ட நாள் குடிநீர் தேவை மற்றும் மக்களின் அன்றாட குடிநீர் தேவையை கருதி, பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவுடன், பேரூரில் 4,276.44 கோடி ரூபாய் மதிப்பில், தினமும் 40 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான கட்டுமானபணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இப்பணிகளை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் வினய் நேற்று ஆய்வு செய்தார்.கடல்நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு, செதிலடுக்கு தொட்டி, சவ்வூடு வெளியேற்றும்தெளிந்த நீர் தொட்டி, நடுநிலைப்படுத்தும் தொட்டி, நீர் சேகரிப்பு தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் சேகரிப்பு தொட்டி, கசடுகளை கெட்டிப்படுத்தும் தொட்டி, நிர்வாக கட்டடம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.மேலும், கடல் நீரை குடிநீராக்க, கடலுக்குள்1.15 கி.மீ., நீளத்திற்கு குழாய் பதிக்கப்படுகிறது. அத்துடன், இந்நிலையத்தில் இருந்து பேரூர் வரை 59 கி.மீ., நீளத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கப்படும். இத்திட்டத்தில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள், சென்னை அருகாமையில் உள்ள, 20 ஊராட்சி பகுதிகளில், 22.67 லட்சம் மக்கள் பயனடைவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.