ADDED : பிப் 08, 2024 12:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எம்.ஆர்.சி., நகரில் உள்ள செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தில், மொழி ஆய்வாளரும், அந்த இயக்ககத்தின் முதல் இயக்குனருமான தேவநேய பாவாணரின், 122வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவரின் சிலைக்கு, இயக்ககத்தின் இயக்குனர் விசயராகவன் உள்ளிட்ட அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இயக்குனர் விசயராகவன் பேசுகையில், ''தமிழ் சொல்லாய்வு துறையில் அரிய தொண்டாற்றிய தேவநேய பாவாணர் துவங்கிய பணியின் தொடர்ச்சியாகவே, தற்போது சொற்குவை வலைதளத்தில் 15 லட்சம் தமிழ் சொற்கள் சேர்ந்துள்ளன,'' என்றார்.

