/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.5,148 கோடியில் வளர்ச்சி பணிகள்
/
ரூ.5,148 கோடியில் வளர்ச்சி பணிகள்
ADDED : நவ 16, 2024 12:36 AM
வால்டாக்ஸ் சாலை, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னை, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில், சி.எம்.டி.ஏ., சார்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், புதிய குடியிருப்புகள் கட்டடப்பட உள்ளன. இந்த பணிகள் குறித்து அமைச்சரும், சி.எம்.டி.ஏ., தலைவருமான சேகர்பாபு ஆய்வு செய்தார்.
பின், சேகர்பாபு கூறியதாவது:
வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், பல்வேறு துறையை சார்ந்த, 228 பணிகள், 5,418 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட உள்ளன. அதில், 140 பணிகள் நடந்து வருகிறது. மீதம் உள்ள பணிகளை விரைந்து துவங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில், வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில், 1,476 குடியிருப்புகள் கட்டுமான பணிகளை, வரும் 30ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.
ஏற்கனவே, 225 சதுரடி பரப்பளவில் இருந்த குடியிருப்புகள், மக்களின் வாழ்வாதாரம் கருதி, 400 சதுரடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.